நிலைமை எவ்வாறு இமையும் என்பது மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Friday, March 27th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களில் எண்ணிக்கையானது இங்கிலாந்தில் முதல் இரண்டு வாரங்களில் அடையாளம் காணப்பட்டவர்களை விட மிக அதிகம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் முதல் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றிய 9 பேர் அடையாளம் காணப்பட்டனர். எனினும் இலங்கையில் முதல் இரண்டு வாரங்களில் 100 பேர் அடையாளம் காணப்பட்டனர் என சங்கத்தின் செயலாளர் மருத்துவ ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

35 நாட்களில் இங்கிலாந்தில் 110 கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். 35 நாட்களில் இலங்கையின் நிலைமை என்ன என்பது மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் இதுவரை 11 ஆயிரத்து 658 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 578 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts: