நிலஅளவையாளர் சங்கமும் எச்சரிக்கை!

Saturday, October 8th, 2016

நிலஅளவையாளர்களுக்கு பயிற்சி வழங்கும் அதிகாரத்தை தனியார் துறைக்கு வழங்குவதற்காக விடுத்துள்ள அரச வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யாது போனால் அடுத்த வாரம் முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச நிலஅளவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அரச நிலஅளவையாளர் திணைக்களத்தை ஆக்கிரமிப்புச் செய்யும் நோக்கில் புதியவர்களுக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகவும் அச்சங்கம் மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி இன்று (07) நாரஹேன்பிட்டி நிலஅளவையாளர் திணைக்களத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் தலைவர் டபிள்யு.எம்.டீ.பீ. உடுகொட அறிவித்துள்ளார்.

1-14

Related posts: