நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!

Thursday, July 28th, 2022

சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக திரிபோஷா உற்பத்தி கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத் திட்டம் அண்மையில் இணக்கம் தெரிவித்திருந்தது.

உலக உணவுத் திட்ட அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே தற்போது திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திரிபோஷ திரிபோஷா நடவடிக்கைகளும் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: