நிரந்தர நியமனம் கிடைக்காது யாழ் போதான வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார தொண்டர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கை!

Friday, May 27th, 2022

நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில், நீண்ட காலமாக யாழ் போதான வைத்தியசாலையில்  கடமையாற்றும் சுகாதார தொண்டர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்.

இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலமையை கவனத்தில் கொண்டு புதிய நியமனங்களை வழங்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதனை தெளிவுபடுத்திய அமைச்சர், எவ்வாறாயினும் எதிர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை  

சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக, நேற்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய, சுப்பர்மடம் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் தலையீடு காரணமாக தமது பகுதியில் ஏற்படுத்தப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களுக்கு வருத்தத்தினையும் தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பின்போது, எரிபொருள் தட்டுப்பாடு உட்பட தொழிலாளர்கள்  எதிர்கொள்ளும் பிரச்சினைகள்  தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: