நிபந்தனை அடிப்படையில் 8 இந்திய மீனவர்கள் விடுதலை!

Friday, January 11th, 2019

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களையும் நிபந்தனையுடன் ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்த காரணத்தால் கடந்த இரண்டு தடவைகளில் எட்டு இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 7 ஆம் திகதி நான்கு மீனவர்களும் ஒரு படகும் மறுநாள் 8 ஆம் திகதி நான்கு மீனவர்களும் ஒரு படகுமாக 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை நீரியல் வளத்துறை யாழ். அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஐர்ப்படுத்தியிருந்தனர். குறித்த மீனவர்களுக்கு எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குறித்த வழக்கு நேற்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதவான் ஏ.யூட்சன் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்படுமென நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.


உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்த எட்டுப் பேருக்...
மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
யாழில் அரச-தனியார் பேருந்து நடத்துனர்கள் கைகலப்பு: மூவர் காயம் !
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சட்டச் சிக்கல்கள்!
15 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை - ஆட்பதிவு திணைக்களம்!