நாளைமுதல் வடக்கு, உள்ளிட்ட 4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
Sunday, April 3rd, 2022
நாளை (04) முதல் வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய மாகாணங்களின் பாடசாலை மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு மாத்திரம் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
ஆசிரியர் சேவையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
வடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம் - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் த...
தடுப்பூசி வழங்கப்படாது விட்டால் வேலை நிறுத்த போராட்டம் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ...
|
|
|


