நாம் செய்யும் பணிகள் ஒவ்வொன்றும் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும் – ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Sunday, November 6th, 2016

கடந்த காலங்களில் நாம் செய்த சேவைகள் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலாக்கப்படாமையே எமது பெரும்பணிகள் ஒவ்வொன்றும் மறைக்கப்பட்டுவருவதற்கான காரணங்களாக அமைந்தள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு எமது கட்சி இன்று எடுத்துள்ள புதிய பரிணாமம் சிறந்ததொரு பெறுபேற்றை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எம்மிடத்தே ஏற்படுத்தியுள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற யாழ்.மாவட்ட வட்டார ரீதியான நிர்வாக குழு உறுப்பினர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

3

எமது கட்சியும் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் பெற்றுக்கொள்ளும் வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பெற்றுக்கொள்ளும் வெற்றியாகவே பார்க்கப்படவேண்டும். டக்ளஸ் தேவானந்தாவனது கரங்கள் பலப்படும்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிவந்த அதிகளவான தேவைகளும் தீர்க்கப்பட்டுச்செல்கின்றது. அவரது அதிகாரங்கள் குறைவடைந்து செல்லும்போது மக்களது வாழ்வியலும் கேள்விக்குறியாகி சென்றுள்ளதை வரலாறு பாடமாக தந்துள்ளது.

இதை மாற்றியமைத்துக்கொள்ளும் வகையிலான மாற்றங்களை நாம் அமைத்துள்ள கட்சியின் தற்போதைய கட்டமைப்புகள் வழிசமைத்து தரும் என நம்புகின்றோம் என தெரிவித்தார்.

000

Related posts: