நான் பார்த்துக் கொள்கின்றேன் – ஞானசார தேரர்!

Sunday, May 28th, 2017

தம்மைப் பற்றி தானே பார்த்துக் கொள்வதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நானே தீர்வு காண்கின்றேன் இது குறித்து எவரும் தலையீடு செய்யத் தேவையில்லை.

நாட்டின் இளம் தலைமுறையினர் இணைந்து சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீரற்ற காலநிலை நீங்க வேண்டுமென வேண்டி நாட்டின் அனைத்து வீடுகளிலும் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் விளக்கு ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ள நிலையில் ஞானசார தேரர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.எனினும் தம்மை கைது செய்யும் முயற்சிகள் குறித்தோ தமது இருப்பிடம் குறித்தோ ஞானசார தேரர் எதனையும் குறிப்பிடவில்லை.

Related posts: