நாணயத்தாள்களை அச்சிட்ட நான்கு பேர் கைது!

Wednesday, June 21st, 2017

முந்தல் உடப்பு ஆடிமுனைப் பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி நாணயத் தாள்களை அச்சிட்டு அந்தப் பணத்தைக் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்ததாக நான்கு பேர் மீதும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். முந்தல் பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.

புத்தளம் பாலாவி மற்றும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படை புலனாய்வுப் பிரிவில் சில காலம் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன், 5000 ரூபா மற்றும் 1000 ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்கள் சிலவற்றையும், மூன்று செல்லிடப்பேசிகளையும் பொலிஸார் சந்தேக நபர்களிடமிருந்து மீட்டுள்ளனர்.பலாவி பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனமொன்றிலிருந்து போலி நாணயத்தாள் அச்சிடப் பயன்படுத்திய அச்சு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் மற்றுமொருவருக்கு ஏற்கனவே 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் சந்தேக நபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts: