நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – ஒருவாரத்தில் 51 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021

நாட்டில் கடந்த ஜூலை 24 ஆம் திகதிமுதல் 30 வரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 51 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த காலகட்டத்தில் மொத்தம் 380 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதனால் 260 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை வீதி விபத்துக்களால் நேற்றையதினம் மாத்திரம் ஒன்பது உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: