நாட்டில் மேலும் சில ஒமிக்ரொன் தொற்றாளர்கள் இருக்கலாம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Saturday, December 4th, 2021

இலங்கையில் முதன் முறையாக ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடைய மேலும் சில தொற்றாளர்கள் நாட்டில் இருக்கக்கூடும் எனப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 ஆம் திகதி நைஜீரியாவில் இருந்து நாடுதிரும்பிய குறித்த இலங்கையரின் தனிமைப்படுத்தல் காலம் தற்போது நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை ஒமிக்ரொன் தொற்று உறுதியான குறித்த பெண், எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருத்து தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, குறித்த பெண்ணுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: