நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக எவையும் இல்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Saturday, July 31st, 2021

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலைமுதல் யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு கிராம அலுவலர் பிரிவும்  தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இலங்கையில் அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் நேற்று மாத்திரம் 2 ஆயிரத்து 455 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 6 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து 2 இலட்சத்து 75 ஆயிரத்து 212பேர் பூரணமாக இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதேவேளை நாட்டில் கொவிட் தொற்றால் 56 பேர் மரணித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4, 380 ஆக அதிகரித்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச விசேட சந்திப்பு – இலங்கையின் பொ...
இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளது - பிரதமர் ...
ஏற்றுமதியை நோக்கி வாழைச் செய்கை முன்னெடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை!