நாட்டில் இன்றும் நாளையும் பரவலாக மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, January 9th, 2024

நாட்டில் இன்றும் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படுதுடன் வடக்கு, கிழக்கு, ஊவா,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: