நாட்டின் சீரற்ற காலநிலையை அடுத்து இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது!

நாட்டில் வடக்கு கிழக்கில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழையுடன் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் குளாங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்து வருகின்றது.
அதன்படி வன்னி மாவட்டத்தில் தற்போதைய நிலவரங்களின் படி இரணைமடுக்குளம் 20 அடியையும், கனகாம்பிகைகுளம் 9 அடியையும் எட்டியுள்ளது.
அத்துடன் குடமுருட்டிகுளம் 7.11 அடியாக உயர்ந்து வான் மட்டத்தை அடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை புரவி புயலின் தாக்கத்தால் யாழ் மாவட்டத்தில் இதுவரை 464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 168 வீடுகள் சேதமடைந்துள்ளன. நால்வர் காயமடைந்துள்ளதுடன் மூவரை காணவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வீழ்ந்துள்ளதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|