நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் – அங்குரார்ப்பண நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ அறிவிப்பு!

Thursday, March 4th, 2021

நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டத்தை இவ்வாண்டுக்குள் பூர்த்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அனுராதபுர மாவட்டத்தின் அலியாபத்துவ கிராமத்தில் சமுர்த்தி உற்பத்;திக் கிராம வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இத்திட்டத்தினூடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் இரண்டு உற்பத்திக் கிராமங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ, சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சு நாடு முழுவதிலும் ‘சௌபாக்கிய வாரத்தை’ அமுலாக்கி வருகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் சுயதொழில்கள் உருவாக்குவதுடன், உற்பத்திகளை சந்தைப்படுத்த சந்தை வசதிகளையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: