நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பிரகளை பொதுமக்கள் சந்திக்க மீண்டும் வாய்ப்பு!

Wednesday, July 14th, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து தமது பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அதற்கென 10 அறைகள் ஒதுக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் எவ்வாறெனினும் அதற்காக ஏழு அறைகளை ஒதுக்க முடியும் என நாடாளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு பிரதம படைக்கல சேவிதர் அறிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..

நாடாளுமன்றத்தில் எம்.பி க்களை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்புகள் கொரோனா வைரஸ் சூழ்நிலை ஆரம்பகட்டத்தில் முழுமையாக தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொழும்பு செல்லும் பார ஊர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பி.சி.ஆர் பரிசோதனை - மாவ...
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் எதிர்வரும் 1 ஆம் திகதி வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி தேர்...
எமது அரசாங்கத்தின் தலைவர் மத்திய வங்கியில் பணத்தை திருடவில்லை - ஊழல் இல்லாத நாட்டை உருவாக்கவே உழைக்...