நாடாளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் – வலியுறுத்துகிறார் ஜனாதிபதி!

Wednesday, October 4th, 2017

பிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் நாடாளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை இடம்பெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் உதவியை அதற்காக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டவாக்கம், நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதித்துறை பிரச்சினைகள் எழாத வண்ணம் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் இறைமையை பலப்படுத்தும் தலைமை நிறுவனம் என்ற வகையில் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டவாக்க அதிகாரத்தை ஒருபோதும் எவரும் சவாலுக்குட்படுத்த முடியாத வகையில் பேண வேண்டியதன் அவசியத்தையும், நிறைவேற்றதிகார முறைமைக்குள் ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை பலப்படுத்தி சட்ட ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related posts: