நல்லூர் திருவிழா வியாபாரத்துக்கு இம்முறை கடுமையான கட்டுப்பாடு!

Wednesday, August 1st, 2018

நல்லூர் ஆலய சுற்றாடலில் மொத்தமாக 37 வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் கேள்வி கோரல் ஊடாக வழங்கப்படவுள்ளன. ஒரு பகுதி கேள்வி கோரல் முடிந்துள்ள நிலையில் மறு கேள்வி கோரலுக்கான வாய்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் இவ் வியாபார நிலையங்கள் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக ஆலய நிர்வாகத்தினால் ஆலய வெளி வீதியில் ஆலயத்தின் புனிதத் தன்மையைக் கருத்தில் கொண்டு கட்டப்படும் சிவப்பு, வெள்ளைத் துணிகளின் எல்லைக்கு அப்பால் வியாபார நிலையங்களுக்கான அனுமதி வழங்குமாறு கோரியுள்ளனர். அதனை ஏற்றே இம்முறை வியாபார நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்படும்.

கடந்த காலங்களில் வியாபார நிலையங்களுக்கான கேள்வி கோரலின் போது வியாபார நிலையங்களின் உரித்தைப் பெறுகின்றவர்கள் பின்னர் மாநகரசபைக்குச் செலுத்திய பணத்தை விட பன்மடங்கு பணத்திற்கு அந்த உரிமத்தை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனால் இம்முறை கேள்விகோரலின்போது அவ்வியாபார நிலையத்தைப் பெற்றுக்கொள்பவரே ஆலயத் திருவிழா முடியும்வரை அவ்வியாபார நிலையத்தை நடத்தமுடியும். வேறு யாரும் அவ்வியாபார நிலையத்தை நடத்துவது அல்லது வேறுயாருக்கும் உரிமத்தை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக அவரின் வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும்.

Related posts: