நல்லிணக்கமும் தலைமைத்துவமும் தொடர்பில் வேம்படி மகளிர் கல்லூரியில் கருத்தரங்கு!

Friday, May 4th, 2018

பாடசாலை மாணவர்களுக்கு நல்லிணக்கமும் தலைமைத்துவமும் என்ற தொனிப்பொருளின் கீழ் செயலமர்வு ஒன்று யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன்பிரகாரம் மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் சிறந்த தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் அநுராதபுரம் சொர்னபாலி மகா வித்தியாலயம், அநுராதபுரம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். இந்து கல்லூரி, யாழ். திருக்குடும்ப கன்னியர்மடம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்காக குறித்த செயலமர்வு நடத்தப்பட்டுள்ளது.

இன மத வேறுபாடற்ற இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் பாடசாலைகளில் மாணவர்களின் மத்தியில் கலாசார புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி சிறந்த தலைமைத்துவம் மற்றும் நல்லிணக்கமுடைய சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்காக குறித்த கருத்தமர்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் 160இற்கும் மேற்பட்ட மாணவிகள் கந்துகொண்டதுடன் கலை நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன.

Related posts: