நலன்புரி முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு 971 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் 31 முகாம்களில் தங்கியுள்ள 971 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக 971 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இந்த தகவலைதெரிவித்தள்ளார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை விரைவாக மீள்குடியேற்ற வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அதன்படி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு விரைவாக வீடுகளை வழங்கவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 31 நலன்புரி முகாம்களில் 971 குடும்பங்கள் தங்கியுள்ளன. அவர்களில் 641 குடும்பங்கள் காணிகளை இழந்தவர்கள். எவ்வாறெனினும் அங்கு வாழ்கின்ற 971 குடும்பங்களுக்கும் வீடுகளை அமைத்துக் கொடுக்க 971 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|