தோழர் மித்திரனின் தாயாருக்கு ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை – புலம்பெயர் தேசங்களிலிருந்தும் இரங்கல் தெரிவிப்பு!

Friday, January 22nd, 2021

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் மரியாம்பிள்ள லூர்த்தம்மா காலமானார்.

இந்நிலையில் அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பங்கெடுத்துக் கொள்கின்றது.

நவாலியை சொந்த இடமாக கொண்ட அமரர் மரியாம்பிள்ள லூர்த்தம்மா வயது மூப்பின் காரணமாக  தனது 89 ஆவது வயதில் நேற்றையதினம்(21) காலமானார்.

இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நவாலியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் அங்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி தமது அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்ததுடன் அன்னாரின் பிரிவால்துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமரரின் இழப்பு தொடர்பில் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களிலிருந்தும் இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: