தொழில்முனைவோரின் கடன்கள் தொடர்பில் அரச வங்கிகளிடம் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விசேட கோரிக்கை!

Wednesday, September 28th, 2022

வங்கித் துறையைப் பாதுகாக்கும் அதேவேளையில் தொழில் முயற்சியாளர்களால் பெறப்பட்ட கடன்களுக்கு உகந்த நிதி நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அரச வங்கிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச வங்கிகள் வழங்கிய கடனுக்கான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளமையினால் இலங்கையின் தொழில்முயற்சியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வங்கி அமைப்பைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என்றும், தேசத்தின் தொழில்முனைவோரைப் பாதுகாப்பது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தற்போதைய வழிகாட்டல்களின் கீழ் தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தெரிவை ஆராயுமாறு அரச வங்கிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரச வங்கிகளின் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: