தொழிற்சாலைகளின் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கண்காணிப்பு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, October 20th, 2020

நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் சுகாதார ஆலோசனைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில்,  முதலீட்டு சபை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க வர்த்தக வலயத்தை மூடுவதற்கான அவசியம் இன்னும்  ஏற்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை சேர்ந்த சுமார் ஐயாயிரம் பணியாளர்கள் நேற்றுமுன்தினம் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவைதவிர,  சுதந்திர வர்த்தக வலயங்களில் மாத்திரமன்றி அவற்றுக்கு அப்பால் இயங்கும் தொழிற்சாலைகளில்,  ஊழியர்களை பணியில்  ஈடுபடுத்துவது தொடர்பில் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: