தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து இன்னும் 200 மில்லியன் கிடைக்கவில்லை – அரச அச்சகம் தெரிவிப்பு!

Monday, May 22nd, 2023

அரச அச்சகத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அச்சிடும் பணிகளுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு 200 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காக அரசாங்க அச்சகத் திணைக்களம் பல முறைதேர்தல்கள் ஆணைக்குழு விற்கு அறிவித்துள்ளதாகவும் அதன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கொடுப்பனவுகளை ஆணைக்குழு பூர்த்தி செய்யத் தவறியமையால் திணைக்களம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்க அச்சக திணைக்களம் உள்ளுராட்சி தேர்தலுக்கான ஆவணங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணியை ஆரம்பித்தது.

திணைக்களம் ஏற்கனவே பல மாவட்டங்களின் தபால் வாக்கு சீட்டுகளை அச்சடித்து முடித்துள்ளது. இவை திணைக்களத்தின் வளாகத்தில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது - பிருத்தானிய கொன்ச...
வடக்கு மார்க்க புகையிரத சேவைகள் அனைத்தும் ஜனவரி 5 முதல் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்படும் –வவுனிய...
சமூக சேவை உத்தியோகத்தருக்கான விண்ணப்பம் கோரப்பட்டு இரு வருடங்களாக பரீட்சை நடாத்தாமல் இழுத்தடிப்பு - ...