தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க!

Wednesday, June 12th, 2019

தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கான கடிதத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டேகொடவிடமிருந்து ருவன் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல் நல குறைவு காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா தேசிய புலனாய்வுப்பிரின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் அறிவித்து பதவி விலகியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர் சிசிர மென்டிஸ் கடந்த வாரம் நாடாளுமன்ற தெரிவு குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: