தூரநோக்கு இல்லாததன் காரணமாகவே நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது – கோட்டாபய ராஜபக்ஸ!

கடந்த அரசாங்கத்தில் ஆட்சி பீடம் ஏறிய ஆட்சியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தூரநோக்கு இல்லாததன் காரணமாகவே இந்த நாட்டில் மீண்டும் அடிப்படைவாத பயங்கரவாதம் தலைதூக்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
நாம் பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பிய தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைய இதுவே காரணமாகியது. நாம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சிறந்த விளக்கத்துடன் இருந்தோம். இதனால்தான், 30 வருட யுத்தத்தை இரண்டரை வருடங்களில் முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.
தமது அடுத்த அரசாங்கத்தில் மீண்டும் அடிப்படைவாத பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டோம் என வாக்குறுதியளிக்கின்றோம். தாம் முன்னர் செய்து காட்டியது போன்று மீண்டும் நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். அதற்கான திட்டம் தம்மிடம் இருக்கின்றது எனவும் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
Related posts:
|
|