திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள்ள பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை!

Sunday, April 10th, 2016

பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் சொந்தமான பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டடுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த ஆலயத்திற்கு சொந்தமான பசுக்கள், மற்றும் ஏனைய எருதுகளும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினால் விற்கப்பட்டு வதை செய்யப்படுவதை கண்டித்தும், இறைச்சிக்காக வதை செய்யப்பட்ட ஆவினங்களின் ஆத்மா சந்திக்கான ஒன்று கூடி பிரார்த்தனையும் கடந்த 3 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஆலயத்திற்கு சொந்தமான பசுக்கள், மற்றும் ஏனைய எருதுகளும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினால் இறைச்சிக்காக விற்கப்பட்டு வதை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டது.

நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிரந்தது திருக்கேதீஸ்வர ஆலயம் .இந்த நிலையில் ஆலயத்தின் புனிதத்தன்மையையும், தமிழர்களின் அடையாளத்தையும் அழிக்கும் நோக்கிலும், பசு மாடுகள் மற்றும் எருதுகளும் விற்பனை செய்யப்பட்டு, திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபையினர் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஆலய பக்தர்களும், திருப்பணிச் சபையின் சில முக்கிய உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் சொந்தமான பசு மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என ஆலய திருப்பணிச்சபையின் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் ஆனால் அதனையும் மீறி சிலர் சட்டவிரோதமாக பசு மாடுகளை விற்பனை செய்துள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பசுமாடுகள் எவையும் விற்பனை செய்யப்படவில்லை என்று திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபை மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆனால் அந்த மறுப்பை ஏற்க முடியாது என்றும் மாடுகள் விற்பனை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் திருப்பணிச் சபையின் சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

பசு மாடுகள் விற்பனை செய்யப்பட்டதற்கு ஆதாரமான பற்றுச்சீட்டுக்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள்ள அதிகளவான பசு மாடுகள் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாகவே அங்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் நீதிமன்றத்தின் அனுமதி கூட இல்லாத நிலையில் ஆலயத்திற்காக வழங்கப்பட்ட கன்று ஈனும் நிலையில் உள்ள பசுக்கள்,மற்றும் ஏனைய எருதுகளும் எவ்வாறு இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வரை 39 பசு மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் 13 ஆவினங்கள் காப்பாற்றப்பட்டு அங்கத்தவர் ஒருவரின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டுள்ளது. 9 ஆவினங்கள் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது. ஏனைய 17 ஆவினங்களின் நிலைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது என திருக்கேதீஸ்வர ஆலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

 625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (7)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (8)

Related posts: