தாக்குதல் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை விரைவில்!

Friday, May 3rd, 2019

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான இரசாயன பகுப்பாய்வு பரிசோதனைகள் இந்நாட்களில் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பரிசோதனைகள் தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கையினை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட இரசாயன திரவங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பலியான வெளிநாட்டவர்களது டி.என்.ஏ பரிசோதனை அறிக்கைகளும் இந்நாட்களில் வழங்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: