தவ்ஹித் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய இன்டர்போலின் உதவி!

Wednesday, May 8th, 2019

வெளிநாடு சென்றுள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பயங்கரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாருடன் இணைந்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்த நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்துடன் இந்த பயங்கரவாத அமைப்புடன் மேலும் சிலர் பல காலமாக பல்வேறு நாடுகளில் மறைந்து இருந்து நிதி ரீதியான உதவிகளை அமைப்பு செய்து வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: