தவறான சிகிச்சை தொடர்பில் 100 முறைப்பாடுகள் – இலங்கை மருத்துவ சபை!
Tuesday, May 23rd, 2017
மருத்துவர்களின் தவறான சிகிச்சை தொடர்பில் கடந்த ஆண்டில் மட்டும் 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.
கடந்த பல வருடங்களில் இது போன்ற 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் மருத்துவர் டெரன்ஸ் காமினி சில்வா தெரிவித்துள்ளார். அதிகப்படியான 100 முறைப்பாடுகள் கடந்த வருடமே கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மருத்துவர்களுக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபைக்குச் செய்யப்படும் எந்தவொரு முறைப்பாடும் சத்தியக் கடாதாசி வடிவத்திலேயே செய்யப்பட வேண்டும். அவ்வாறு வரும் முறைப்பாடுகள் மாத்திரமே விசாரணைக்கு எடுக்கப்படும். சத்தியக் கடதாசி இன்றி வரும் முறைப்பாட்டுடன் தவறான சிகிச்சைப் பற்றிய பத்திரிகைச் செய்திகளை இணைத்துக்கொள்ளும் உரிமை மருத்துவ சபையின் பதிவாளர் அலுவலகத்தையே சாரும்.
நீதிமன்றங்களைப் போலவே மருத்துவச் சபையிலும் விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. முறைப்பாட்டாளர்கள் சார்பிலும் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர்களின் சார்பிலும் மருத்துவ சபையில் முற்படும் சட்டத்தரணிகள் சரியான ஒத்துழைப்பை வழங்காமையே இந்தத் தாமதத்துக்கான முக்கிய காரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
|
|