தற்போது நாடு எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவிப்பு!

தற்போது நாடு எதிர்நோக்கும் பல முக்கிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலங்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிளெக்ஸி கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை திறந்து வைத் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறிப்பாக நாடு எதிர்நோக்கும் அந்நிய செலாவணியை ஈட்டும் பிரச்சினைக்கு இந்த புதிய நிறுவனம் முக்கியத்துவம் வாய்ந்தது என அமைச்சர் தெரிவித்தார்.
இதேநேரம் இந்நிறுவனம் தயாரிக்கும் மருத்துவ உபகரணங்களில் 90% ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படுவதால் அதிக அளவில் அந்நியச் செலாவணி கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு இது ஒரு தீர்வாக அமையும் என்றும், எதிர்வரும் 25 ஆம் திகதி உலகின் முன்னணி ஐடி நிறுவனம் இந்நாட்டில் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டிலுள்ள 2000 இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை வழங்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|