தடைசெய்யப்பட்ட வாள் வைத்திருந்த இளைஞர் யாழில் கைது!

Monday, September 4th, 2017

தடைசெய்யப்பட்ட வாளொன்றினை வைத்திருந்த யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியைச் சேர்ந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள சந்தேகநபரின் வீட்டைப் பொலிஸார்  சுற்றிவளைத்துள்ளனர். இதன் போது  தடை செய்யப்பட்ட வாள் மற்றும் ஹெரோஜின் போதைப் பொருள் என்பவற்றைத் தன வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைதானவராவார்.

கைதான இளைஞரை  இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Related posts:


விடுமுறை காலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டரீதியானதா? - விளக்கம் கோரி சட்ட மா அதிபரி...
நாடு திரும்பும் இலங்கை பணியாளர்களுக்கு இலவச PCR பரிசோதனை - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அற...
மூன்று இலட்சம் அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும் - பொதுச் செலவினங்களைக் குறைக்க அரச சேவைக்கான புதிய ஆட...