தடம் புரள்கின்றது கூட்டமைப்பு – வடக்குமாகாண சபை உறுப்பினர் தியாகராசா!

தமிழ் மக்களின் விருப்புக்குமாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டுவருவதாகவும், தடம்புரள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்குமாகாண சபை உறுப்பினர் தியாகராசா கவலை தெரிவித்துள்ளார்.
சிங்களத் தலைமைகள் தமிழர்களுக்கானஅரசியல் தீர்வைவழங்காமல் காலங்கடத்தியதுதான் இதுவரையானவரலாறாக உள்ளது. இந்தநிலையில் வழங்கியவாக்குறுதிகளை நம்பி மக்கள் கூட்டமைப்பினரை வெற்றிபெறச் செய்தனர்.
ஆனால் தேர்தலில் வெற்றிபெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று தடம் புரண்டு வருகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்துள்ளது.
இந்தநிலையில் நிகழ்காலநிலைமையைக் கருத்தில் கொண்டு அடுத்த செயற்பாட்டை தீர்மானிக்கவேண்டிய பொறுப்பை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் தியாகராசா தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட முடியாத நடைமுறைச் சாத்தியமாகாத வாக்குறுதிகளை வழங்கி மக்களிடம் வாக்குகளை அபகரித்துக் கொண்டவர்கள் இன்று வாக்களித்த மக்களை ஏமாற்றி நட்டாற்றில் விட்டுள்ள நிலையில் மக்களேதமது உரிமைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் வீதிகளில் இறங்கிப் போராடிவருவதையும் அவதானிக்கமுடிகின்றது.
இதனூடாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஏமாற்றுநாடகம் அரங்கேறிவருகின்றநிலையில் தமிழ் மக்கள் உண்மைநிலைவரங்களைதற்போதுஉணரத் தொடங்கியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|