தகுதியற்ற 70 அதிகாரிகள் அடையாளம் – தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவிப்பு!
Friday, May 19th, 2023நாட்டில் இதுவரை தகுதியற்ற சுமார் 70 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் பொறுப்புக்கூற வேண்டிய தகுதிவாய்ந்த அதிகாரிகள் உள்ளூராட்சிமன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும்.
தகுதி இருந்தாலும் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வினைத்திறன்மிக்கவர்கள் தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தகுதியற்ற பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் மாநகர ஆணையாளர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|