தகவல் தொழில்நுட்பத் துறையின் அபிவிருத்தி: இந்தியா பூரண ஒத்துழைப்பு!
Tuesday, January 16th, 2018இலங்கைக்கு விஜயம்செய்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்..
முன்னாள் அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் தொடர்பாக நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக இலங்கை வந்துள்ள இந்திய அமைச்சர் இந்த சந்திப்பின் போது தகவல் தொழில்நுட்பத் துறையின் அபிவிருத்திக்கான புதிய போக்குகளை இலங்கை இனங்காண இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவித்தார்;.
நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாடசாலை பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த பாடுபட்ட உலகத் தலைவர்களின் பட்டியலில் இலங்கைப் பிரதமரும் இணைவதாக இந்திய அமைச்சர் கூறினார்.
பாடசாலை மாணவர்களுக்கு ரெப் கணனிகளை வழங்கும் திட்டம் குறித்து பிரதமர் விளக்கமளித்தார்.
Related posts:
வளிமண்டலவியல் திணைக்களம் நவீனமயப்படுத்தப்படும் - அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா!
கம்பரலிய திட்டத்தில் மோசடி: வடமராட்சி மக்கள் ஆதங்கம்!
நாடாளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 % சதவீத பலத்தை பெற முடியாது - ஜனாதிபத...
|
|