டொலரின் பெறுமதி குறைவடைந்தால் மருந்துப் பொருட்களின் விலைகளும் குறையும்!  

Monday, December 25th, 2017

எதிர்காலத்தில் டொலரின் பெறுமதி குறைவடைந்தால் நூற்றுக்கு ஐந்து வீதம் அதிகரிக்கப்பட்ட மருந்துப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மருந்துப் பொருட்களின் விலைகள் 95 வீதம் குறைக்கப்பட்ட பொழுது எதுவித கருத்தும் தெரிவிக்காத ஊடகங்கள் மருந்துப் பொருட்களின் விலைகள் ஐந்து வீதம் அதிகரிக்கப்பட்ட பொழுது கூடுதலான விமர்சிக்கின்றமை கவலைக்குரிய விடயம் என்றும் அமைச்சர் கூறினார்.

பயாகல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய லங்கா சதொச விற்பனை நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts: