டெல்டா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் 4 ஆவது அலை ஆரம்பமாகும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!
Sunday, July 25th, 2021நாட்டில் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், நாட்டில் இதுவரை 68 பேர் டெல்டா திரிபு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், இதனைவிட அதிகளவான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலை தொடருமானால் இலங்கையில் 4ஆவது கொவிட் அலை ஆரம்பமாகக் கூடும் எனவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.
மேலும் நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தற்போதைய மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த பொறுப்புடன் செயல்பட்டால், 4ஆவது கொவிட் அலையை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
வடமராட்சியில் பொலிஸார் துப்பாக்கி சுடு: ஒருவர் பலி!
3 ஆயிரத்து 626 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள்!
500 தூண்களுடன் புங்குடுதீவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது கோயில் - எதிர்வரும் 25 ஆம் திகதி மகா கும்பாபி...
|
|