டெங்குத் தொற்று – ஊர்காவற்றுறையில் 50 பேர் பாதிப்பு!

Saturday, December 15th, 2018

கடந்த ஒன்றரை மாத காலப்பகுதியில் ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் 50 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியதாக இனங்காணப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 50 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியதாகவும் மேலும் இத்தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் நாரந்தனை, மெலிஞ்சிமுனை ஆகிய பகுதிகளே அதிகமான டெங்கு நோயாளர்களைக் கொண்ட பகுதியாக விளங்குகிறது.

இப் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகையூட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நுளம்புகள் பரவுவதற்குரிய சாதகமான சூழலை வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: