டிக்கோயா வைத்தியசாலையை திறந்துவைத்தார் இந்தியப் பிரதமர்!

Friday, May 12th, 2017

இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் திறந்துவைத்துள்ளார்.

இந்திய பிரதமருடன், ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்டோரும் இணைந்து குறித்த வைத்தியசாலையை திறந்துவைத்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் வசதிகள் குறித்து பார்வையிட்டுள்ளனர்.இந்நிகழ்வில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பலர் கலந்துகொண்டிருந்ததோடு, ஆயிரக்கணக்கான மக்களும் குழுமியிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 

Related posts:


அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடப்படும் - இலங்கைக்கான ச...
மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் 25 ஆம் திகதிமுதல் மீள ஆரம்பம் - அமைச்சர் பவித்ரா வன்னியாரச...
இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரச...