ஜனாதிபதி உறுதியான தீர்வு முன்வைக்கும் வரை தொடர் வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் 

Friday, October 20th, 2017

 

தமிழ் அரசியற் கைதிகள் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி உறுதியான தீர்வு முன்வைக்கும் வரை தொடர் வகுப்புப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே. கிருஷ்ணமீனன் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை(20) பிற்பகல் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துச் சங்கங்கள் மற்றும் சமூகத்தினரின் ஆதரவைக் கோரியுள்ளோம். ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக இந்த விவகாரம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு வழங்குவதாகத் தெரிவித்துள்ள போதும் இது தொடர்பாக எங்களுக்கு முழு நம்பிக்கையில்லை.
எனினும், எதிர்வரும் புதன்கிழமை வரை அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளோம். புதன்கிழமைக்கு முன்னர் உரிய தீர்வு கிடைக்காதவிடத்துப் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.

Related posts: