சோதனைகளை சாதனைகளாக்கி சாதித்துக்காட்டியவர்கள்  நாம் – ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன்!

Sunday, June 24th, 2018

நாம் இன, மொழி, மதவாத சித்தாந்தங்களை கொண்டு செயற்படுபவர்கள் அல்ல. அதுமாத்திரமன்று  எமது கட்சி ஒருபோதும் இனவாதத்துடன் செயற்பட்டதும் கிடையாது என ஈமக்கள் ஜனாநயகக் கட்சியின் தவிசாளரும் சர்வதேச அமைப்பாளருமான மித்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின்போதே குறித்த விடயத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

80 களின் முற்பகுதியில் தமிழ் இளைஞர்களை ஆயுதப்போராட்டத்திற்கு தூண்டியவர்கள் அப்போதிருந்த தமிழ் அரசியல் தலைமைகளே.

பின்னர் தவறான வழிநடத்தல்களினால் எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களையும் துயரங்களையும் நாம் நன்கறிவோம். இணக்க அரசியலினூடாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மக்களுக்கான பல்வேறுபட்ட பணிகளை செய்து முடித்துக் காட்டியுள்ளோம்.

ஆனாலும் செய்து முடிக்கப்படவேண்டிய வெலைத் திட்டங்களை தொடர்ச்சியாக செய்து முடிக்காமைக்கு மக்கள் எமக்கு முழுமையான அதிகாரத்தை தராமையும் ஒரு காரணமாக அமைகின்றது.

ஆனால் தற்போது இணக்க அரசியலை முன்னெடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரையில் எவ்வாறான மக்கள் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள் என்பதை வரலாறு இன்று சாட்சிபகர்கின்றது.

உயர் பதவிகளையும் அதிகாரங்களையும் தம்வசம் வைத்துள்ள கூட்டமைப்பினரால் வறுமைப்பட்ட மற்றும் நலிவுற்ற மக்களுக்கு எதனையும் செய்து முடிக்காதவர்களாகவே காணப்படுகின்றனர்.

ஆனாலும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெற்கு அரசியல் தலைமைகளால் மட்டுமன்றி இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் தலைமைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் அரசியல்வாதியாக இருக்கின்றார்.

அரசியல் தொலைநோக்கு உள்ளவராகவும் மக்களின் நலன்களுக்காக தன்னை அர்ப்பணித்தவருமாக டக்ளஸ் தேவானந்தா விளங்குகின்றார் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts: