சுற்றுலா பயணிகளுக்காக இலங்கை சர்வதேச விமான நிலையம் திறப்பதற்கு மேலும் தாமதமாக – சுற்றுலா அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, September 6th, 2020

கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு மேலும் தாமதமாக கூடும் என சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையத்திற்குள் சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகளின்றி நாட்டிற்கு நுழைவதற்காக காலப்பகுதியை உறுதியாக கூற முடியாதெனவும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பபினும் இதற்கு முன்னர் ஒக்டோபர் மாதம் விமான நிலையத்தை திறப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் ஆலோசனைக்கமையவே விமான நிலையம் முழுமையாக திறக்கப்படும் என சுற்றுலா அமைச்சின் செயலாளர் தெரிவிக்கப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பின் தகவலுக்கமைய கொரோனா வைரஸ் தீவிரம் இன்னமும் நீங்கவில்லை எனவும் மேலும் இரண்டு வருடங்களாக கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இது தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகளை தளர்த்துவது சிரமம் எனவும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: