சுகாதார வழிகாட்டல் விதிகளை சட்டமாக கொண்டு வருவது தொடர்பில் அவதானம்!

Tuesday, June 9th, 2020

சுகாதார வழிகாட்டல் விதிகளை சட்டமாக கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இது தொடர்பில் சுமார் 42 துறைகள் தொடர்பில் இவ்வாறு சுகாதார வழிகாட்டல் நியதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நியதிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டல் நியதிகளில் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் பின்பற்றப்பட வேண்டிய நியதிகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: