சுகாதார தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்புக்கு விரைவில் தீர்வு – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Wednesday, February 9th, 2022

தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி நியாயமான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

உரிய தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள சில கோரிக்கைகளுக்குத் துரிதமாக தீர்வு வழங்க முடியும். இது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் சில கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக இரண்டு வாரங்கள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 7 கோரிக்கைகளை முன்வைத்து 18 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால், நோயாளர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். நாடளாவிய ரீதியில் 65 ஆயிரம் சுகாதாரத் துறை ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: