சீரடைந்தது எரிபொருள் விநியோகம் – பிரதமர்

எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டதை அடுத்து, நேந்று நண்பகல் அளவில் சகல நடவடிக்கைகளும் சீரடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒரு போதும் தொழிற்சங்க அமைப்புக்களுடனான பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கவில்லை. பெற்றோலிய தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் மாத்திரமன்றி தாமும் இரு தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பெற்றோலிய விநியோகம் முடங்கினால் நாட்டின் சகல விடயங்களும் பாதிக்கப்படும். வைத்தியசாலை சேவைகள், டீசல் மின் உற்பத்தி, பொதுப் போக்குவரத்து போன்ற துகைளும் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது. இது தவிர விமானசேவைகள் நிறுத்தப்பட்டு துறைமுக செயற்பாடுகளும் சீர்குலைந்து நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். பாடசாலை பரீட்சைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இயல்பு வாழ்க்கை முடங்குமென பிரதமர் கூறினார்.
எந்தவொரு தொழிற்சங்க அமைப்பும் தொழில்துறை சார்ந்த மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் ஆர்ப்பாட்டம் செய்யலாம். போராட்டம் நடத்தலாம். அதில் பிரச்சினையில்லை. எனினும் ஒரு கும்பல் எதுவித ஆதாரமும், ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களும் இல்லாமல் நாட்டில் இயல்பு நிலையை சீர்குலைத்து நாட்டின் ஸ்திர நிலைக்கு பங்கம் விளைவிக்க முனையுமானால், ஒரு பொறுப்புள்ள அரசென்ற ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறதென பிரதமர் தெரிவித்தார்.
Related posts:
|
|