சிவில் பாதுகாப்பு திணைக்களம் எந்தவகையிலும் கலைக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி!

Thursday, December 14th, 2023

சிவில் பாதுகாப்பு திணைக்களம் எந்தவகையிலும் கலைக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

முன்பதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் கலைக்கப்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசிங்க, சிவில் பாதுகாப்பு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதன்போது திணைக்களத்தை கலைப்பதில்லை என ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் இது குறித்து தொடர்ந்தும் பேச வேண்டியதில்லை எனவும் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: