சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் – விசாரணை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்!
Tuesday, July 21st, 2020
சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மூன்று பேருக்கு பூஸா சிறைச்சாலையில் உள்ள போதை பொருள் தரகர் கொஸ்கொட தாரக மரண அச்சுறுத்தல் விடுதமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமறியல்கள் தலைமையக சிரேஸ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொஸ்கட தாரக உட்பட மேலும் சில கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட சென்ற அதிகாரிகள் மீதே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளமை உறுதி!
அச்சுறுத்தல் இன்றி சகல பிரஜைகளுக்கும் தாம் விரும்பும் இடங்களில் வாழுவதற்கான உரிமை உண்டு – அரசாங்கம் ...
வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பியுங்கள் ...
|
|
|


