சிறுப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மேலுமொருவர் படுகாயம்!

Saturday, March 17th, 2018

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் நேற்று (16) இரவு நடைபெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். நகரிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் எதிரே வந்த மோட்டார்ச் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து இன்று இரவு 8.45 மணியளவில் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: