சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Sunday, July 16th, 2023

சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மற்றைய வாகனங்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு முச்சக்கரவண்டியையும் இயக்க அனுமதிக்கப்படாது எனவும் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் அதன் உதவி ஆணையாளர் சுஜீவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சுமார் 08 மில்லியன் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் சுமார் 02 மில்லியன் முச்சக்கர வண்டிகளாகும்.

முச்சக்கரவண்டியின் பல்வேறு மாற்றங்கள் அவரவர்களின் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் இன்று அனைத்து பகுதிகளிலும் காணக்கூடியதாக உள்ளது.

இதன்படி சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: