சிறப்புற நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் பிராந்திய செயற்குழுக் கூட்டம்!

Sunday, December 9th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் பிராந்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (08) இடம்பெற்றது.

செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விஷேட ஏற்பாட்டில் நேற்றைய தினம் (08.12.2018) Shenley church, end leisure centre, Milton Keynes, mk5 6hf என்ற முகவரியில் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர்களான சுவிஸ் பிராந்தியப் பொறுப்பாளர் தோழர் திலக் மற்றும் கட்சியின் ஜேர்மன் பிராந்தியப் பொறுப்பாளரும், செயலாளர் நாயகம் அவர்களின் இணைப்பாளருமான தோழர் மாட்டின் ஜெயா ஆகியோரின் தலைமையில் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடி மரணித்த போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து, தோழர் திலக் உரையாற்றுகையில், எமது மக்களின் இன்றைய, எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்குத் தோழர்களாகிய எமது ஒற்றுமையும், தளராத, தொடர்ந்தும் வழங்கப்படுகின்ற ஒத்துழைப்புக்களுமே அனைத்து விடயங்களையும் உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு முடியும் என்று தெரிவித்தார்.

அத்துடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கருத்துக்கள் வலுப்பெறுகின்ற காலமான இச்சூழ்நிலையில் தளத்தில் மாத்திரமல்ல, புலம்பெயர் தேசங்களிலும், தோழர்களாகிய நாம் எமது அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதியுடன் கரங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

அவரது உரையைத் தொடர்ந்து தோழர் மாட்டின் ஜெயா உரையாற்றும் போது, எமது இனம் தோற்றுப்போன இனம் அல்ல என்றும், எமது உளப்பலத்தின் ஊடாகவும், ஒற்றுமையான செயற்பாடுகள் ஊடாகவும் அப்பழுக்கற்ற தோழமையின் ஊடாகவும் அரசியல், பொருளாதார வாழ்வியலில் எமது மக்களை வழிநடத்திச் செல்ல, தோழர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்றும், வடக்குக் கிழக்கில் யூத இனத்தை முன்மாதிரியாகக் கொண்டு, எமது மண்ணின் வளங்களைப் பயன்படுத்தி, விவசாயப் புரட்சிகள் ஊடாகவும், ஒன்றிணைந்த பொருளாதார நடவடிக்கைகளின் ஊடாகவும், எமது இனத்திற்குப் பலம் சேர்க்க புலம்பெயர் மண்ணில் இருந்து முதலீட்டாளர்களையும், முதலீட்டாளர்களாகத் தோழர்களும் முன்வர வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

அத்துடன், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றியதைத் தொடர்ந்து, காணொளி ஊடாக கட்சியின் சர்வதேசப் பொறுப்பாளர் தோழர் மித்திரன் உரையாற்றும் போது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் எழுச்சி கண்டு, உழைக்காமல் அரசியல் பதவிகளை அலங்கரிக்க நினைப்பவர்கள் அதிர்ந்து போயுள்ளதாகவும், அமைச்சரவையில் பங்கேற்று, ஒரு மாத காலத்திற்குள் 10ற்கும் மேற்பட்ட அமைச்சரவைப் பத்திரங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றும், தொடர்ச்சியாக எமது இனத்திற்கு எந்தவொரு தலைவனும் ஆற்றியிராத, மிகப்பெரும் பணியை முன்னெடுத்துச் செல்கின்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குத் தோழர்களாகிய நாம், உடல்ரீதியானதும், பொருளாதார ரீதியானதுமான ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருந்தார்.

அத்துடன், பிரித்தானியாவின் செயற்பாட்டாளர்களான தோழர் ரமேஷ், தோழர் விக்னேஸ், தோழர் ரமணன் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருந்த அதேவேளை, ஏனைய மூத்த தோழர்களான சீலன், மனோ, திலீப், பாலா, சலீம் மற்றும் ராஜ்குமார், ஆனந்தன், பாபு, தயான், சுரேன் ஆகியோரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

viber image

8

7

5

3

4

6

Related posts: